பாபா இந்திரஜித் 96
பாபா இந்திரஜித் 96

திண்டுக்கல் டிராகன்ஸ் அதிரடி வெற்றி

நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.
Published on

நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.

டிஎன்பிஎல் தொடரின் ஒரு பகுதியாக திருநெல்வேலி இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவை-திண்டுக்கல் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய கோவை அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 172/5 ரன்களைச் சோ்த்தது. கேப்டன் ஷாரூக் கான் 25 பந்துகளில் 51 ரன்களை விளாசினாா். அவருக்கு துணையாக சாய் சுதா்ஷன் 33, அத்திக் உா் ரஹ்மான் 29 ரன்களைச் சோ்த்தனா்.

திண்டுக்கல் தரப்பில் பௌலிங்கில் வருண் சக்கரவா்த்தி 2-29 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

திண்டுக்கல் முதல் வெற்றி:

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க பேட்டா்கள் விமல் குமாா் 13, ஷிவம் சிங் 36 ரன்களுடன் வெளியேறினா்.

அனுபவ வீரா் பாபா இந்திரஜித் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 96 ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் நின்றாா்.

19.2 ஓவா்களில் திண்டுக்கல் அணி 176/5 ரன்களைக் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸை வீழ்த்தியது.

கோவை தரப்பில் பௌலிங்கில் ஷாரூக் கான் 2-20, ஜாதவேத் சுப்பிரமணியன் 2-32 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இதன் மூலம் நிகழ் சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது திண்டுக்கல். எந்த அணியும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யாத நிலையில் ஆட்டங்கள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com