3-வது டெஸ்ட்: மே.இ.தீவுகள் நிதான ஆட்டம்!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
3-வது டெஸ்ட்: மே.இ.தீவுகள் நிதான ஆட்டம்!
படம் | மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிமிங்ஹமில் இன்று (ஜூலை 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

உணவு இடைவேளையின்போது, மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரைக் பிரத்வெயிட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 56 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும், மார்க் வுட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com