டி20 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை..! உண்மையை ஒப்புக்கொண்ட ஷுப்மன் கில்!
டி20யில் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார்கள். இந்த இரண்டிலும் ஷுப்மன் கில் துணை கேப்டனாக செயல்படுவாரென சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.
இந்தியா - இலங்கை மோதும் டி20 ஆட்டங்கள் ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளில் பல்லெகெலெவில் நடைபெறவுள்ளன.
24 வயதாகும் ஷுப்மன் கில் 19 டி20 போட்டிகளில் 505 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 29.7 ஆக இருக்கிறது. 44 ஒருநாள் போட்டிகளில் 2271 ரன்களும் அதில் சராசரி 61.37ஆக இருக்கிறது.
இந்நிலையில் நேர்காணலில் ஷுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
2024 உலகக் கோப்பை வரை டி20 செயல்பாடுகளில் தனிப்பட்ட முறையில் எனக்கு திருப்தியில்லை. நான் நினைத்தது மாதிரி விளையாடவில்லை. அடுத்து 30-40 டி20 போட்டிகள் வருகின்றன. இதில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.
பேட்டராக எனது பங்கில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை. நான் பேட்டராக விளையாடும்போது எனது நாடு வெற்றி பெறவே விரும்புகிறேன். ஆனால், நீங்கள் களத்தில் இருக்கும்போது, ஒரு வீரராக விளையாடுவதைவிட அதிகமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
நானும் சூர்யகுமாரும் ஒரேமாதிரி சிந்திக்கக் கூடியவர்கள். தென்னாப்பிரிக்க தொடரில் அவரது தலைமையில் விளையாடியிருக்கிறேன். எங்களது புரிதலும் உரையாடல்களும் ஒரேமாதிரி இருக்கும். வரும்போட்டிகளில் அதைப் பார்க்கலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.