
இந்திய அணி வரும் நவ.22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.
இந்த அணியில் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ஷமி ரஞ்சி கோப்பை போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடுகிறார்.
மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் ஷமி விளையாடுகிறார். பெங்கால் அணி 8 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் இருக்கிறது.
ஒரு வருடமாக காயம் காரணமாக ஷமி விளையாடாமல் இருக்கிறார். கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்றார்.
ஷமி 64 டெஸ்ட்டுகளில் 229 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடந்த மாதம் ஷமி 100 சதவிகிதம் தான் நலமுடன் இருப்பதாகக் கூறியிருந்தார்.
டிச.14ஆம் தேதி முதல் பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாட ஷமி தயாராக இருப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 5 போட்டிகள் கொண்ட இந்திய அணியில் ஷமியின் பெயர் சேர்க்கப்படாதது குறிப்பிட்டத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.