பிச்சைக்காரர்களின் நம்பிக்கை..! இந்திய அணியை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்ததுக்கு முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்
Published on
Updated on
1 min read

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

முதல் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இந்தியா ஏ அணியுடன் ஆடவிருந்தது. அதை ரத்து செய்துள்ளது பிசிசிஐ அணி.

இதனை முன்னாள் வீரரும் தொடருக்கு பெயர் காரணமான சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிச்சைக்காரர்களின் நம்பிக்கை

இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியினை ரத்து செய்தது பிச்சைக்காரர்களின் நம்பிக்கை எனலாம். ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஆடுகளத்தின் நடுவில் நின்று நேரமெடுத்து பந்தினை நடு பேட்டில் அடிக்கும் உணர்வு எங்குமே கிடைக்காது.

எவ்வளவுதான் வலைப்பயிற்சியில் பயிற்சி செய்தாலும் கிரீஸில் நின்று விளையாடும்போது வரும் பேட்டின் வேகம், அதன் இயல்பு தன்மை வேறெங்கும் கிடைக்காது.

இந்திய அணி காயம் ஏற்படுவதால் விளையாடவில்லை எனக் கூறுவது சரிதான். ஏன் வலைப்பயிற்சியில் காயம் ஏற்படாதா?

போட்டியில் விளையாடுவது போல் வராது

ஒருவர் வலைப்பயிற்சியில் விளையாடும்போது 3,4 முறை ஆட்டமிழந்தாலும் அடுத்து விளையாடலாம் என்ற எண்ணம் இருக்கும். ஒரு அழுத்தமும் இருக்காது. ஆனால் போட்டியில் அப்படியில்லை.

அதேபோல பந்துவீச்சாளர்களுக்கும் முறையான ஓடும் முறை, நோ பால் வீசாமல் இருக்கும் கவனம், எந்த இடத்தில் பந்தினை ஃபிட்ச் செய்வது என ஆடுகளத்தில் விளையாடும்போதுதான் வரும். அந்த மனப்பாங்கும் கற்றலும் வலைப்பயிற்சியில் வரவே வராது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com