ரோஹித் - ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை..! முதல் டெஸ்ட்டில் ரோஹித் விளையாடுவாரா?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ரோஹித் சர்மா- ரித்திகா.
ரோஹித் சர்மா- ரித்திகா.
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஏற்கனவே, இந்தத் தம்பதியினருக்கு 2018இல் பெண் குழந்தை பிறந்தது.

வெள்ளிக்கிழமை இரவு ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு புறப்படவில்லை. குழந்தை பிறக்க இருப்பதால் இந்தியாவிலேயே இருந்தார். நவ.22ஆம் தேதி தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நடைபெறவிருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ரோஹித் முதல் டெஸ்ட்டில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

ஆனால், ரோஹித் இவ்வளவு சீக்கரம் குழந்தையை விட்டு வருவாரென்பது கடினமான சூழ்நிலையே.

நான்கு நாள்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு 2ஆவது குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் ஹெட் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா இல்லாமல் கேப்டன் பொறுப்பினை பும்ரா பார்க்கவேண்டியிருக்கும். அதே வேளையில் தொடக்க வீரருக்கும் புதியதாக ஒருவரை நியமிக்க வேண்டும்.

கே.எல்.ராகுலுக்கு காயம், ரஞ்சியில் சிறப்பாக விளையாடிய அபிமன்யூ ஈஸ்வரன் இருந்தாலும் ரோஹித் அளவுக்கு அனுபவம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ இதுகுறித்து விரைவில் தகவல்தருமென ரசிகர்கள் காத்துவருகிறார்கள். பிரபலங்கள் ரோஹித்துக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com