ஸ்மித்தின் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன்..! வாட்சன் நம்பிக்கை!

ஆஸி.யின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஸ்டீவ் ஸ்மித் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
கோப்புப் படம் (ஸ்டீவ் ஸ்மித்)
கோப்புப் படம் (ஸ்டீவ் ஸ்மித்)
Published on
Updated on
1 min read

ஆஸி.யின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஸ்டீஸ் ஸ்மித் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆஸி..க்கு சுழல்பந்து வீச்சாளராக அறிமுகமாகி மிகச்சிறந்த டெஸ்ட் பேட்டராக உருவாகியுள்ளார். வார்னருக்குப் பிறகு தொடக்க வீரராக களமிறங்கி சோபிக்காததால் மீண்டும் தனது நம்.4 இடத்துக்கே திரும்பியுள்ளார்.

டெஸ்ட்டில் ஸ்மித் 109 போட்டிகளில் 9,685 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் 19 போட்டிகளில் 2,042 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 65.9ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், வில்லோ டாக் கிரிக்கெட் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் வாட்சன் பேசியதாவது:

ஸ்டீவன் ஸ்மித் தொடக்க வீரராக ஆட விரும்புகிறார். புதிய சவால்களை சந்திப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த வாய்ப்பு கிடைத்தபோது அவரால் சரியாக செயல்படமுடியவில்லை. தொடக்கமோ அல்லது 4ஆவது இடமோ எங்கு இறங்கினாலும் இந்தமுறை ஸ்மித் சிறப்பாக விளையாடுவார். ரன்களை குவித்தல் மிகவும் ஆர்வம் உடையவர் ஸ்மித்.

தொடக்க வீரராக களமிறங்கியபோது சிலமுறை ஆட்டமிழந்தார். அப்போது அவரது தொழில்நுட்பம் சரியாக இருக்கவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடினார். நேரமெடுத்து அனைத்து வகையான ஷாட்டுகளையும் விளையாடினார். இந்தமுறை ஸ்மித் எங்கு இறக்கினாலும் தனது சிறந்த பேட்டிங்கின் மூலமாக ரன்களை குவிப்பாரென நம்புகிறேன் என்றார்.

ஸ்மித் 109 போட்டிகளில் 32 சதங்கள், 41 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார். ஆஸி.க்கு அதிகமாக ரன்கள் அடித்தவர் பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com