
இந்திய அணி நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் 0-3 என வரலாற்று தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து ஆஸி. உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது.
நாளை (நவ.22) நடைபெறவுள்ள முதல் டெஸ்ட்டுக்கு இந்தியாவின் கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா செயல்படவிருக்கிறார்.
ரோஹித் சர்மா மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவர் இந்தியாவில் இருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா கூறியதாவது:
நீங்கள் வெற்றி பெற்றாலும் அடுத்த போட்டியினை பூஜ்யத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். அதேபோல் தோல்வியடைந்தாலும் பூஜ்யத்திலிருந்தே தொடங்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்ட தோல்வியின் நினைவுகள் எதையும் நாங்கள் இங்கு கொண்டுவரவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுள்ளோம். ஆனால், அது மாறுபட்ட சூழ்நிலை. தற்போது இருக்கும் சூழ்நிலை வேறுமாதிரியானது.
பிளேயிங் லெவனை முடிவு செய்துவிட்டோம். நாளை காலை உங்களுக்கு அது தெரியவரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.