
இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் டி10 கிரிக்கெட்டில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
அபுதாபியில் நடைபெறும் டி10 கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். 14 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
டெக்கன் கிளாடியேடர்ஸ் அணியில் விளையாடும் பட்லர் சென்னை ப்ரேவ் ஜாகுவர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மொத்தமாக 24 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அதில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
முதலில் விளையாடிய சென்னை ப்ரேவ் அணி 10 ஓவர்களுக்கு 141/2 ரன்கள் எடுத்தது. இதில் வன் டர் டுசென் 62 (29), கிறிஸ் லின் (28) ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
அடுத்து விளையாடிய டெக்கன் கிளாடியேட்டர்ஸ் அணியில் காட்மோர் 51 (24), பட்லர் 62 (24), ரைலி ரோஸ்ஸோவ் 16 (5) எடுத்தார்கள். 2 பந்துகள் மீதமிருக்க போட்டியில் வென்றார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.