

பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
பொ்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட்டில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்காததால், இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.
இந்திய அணி
கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட்(கீப்பர்), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா(கேப்டன்), முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணி
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி(கீப்பர்), பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்
கிரிக்கெட் உலகில் ஆஷஸ் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனிக்கப்படுவதாக இந்த பாா்டா் - காவஸ்கா் கோப்பை (பிஜிடி) தொடா் உள்ளது. அதில், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா சந்திக்கிறது.
இந்த முறையும் ஆஸ்திரேலிய மண்ணில் பிஜிடி தொடரை இந்தியா கைப்பற்றினால், அது ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் ‘ஹாட்ரிக்’ வெற்றியாக இருக்கும். கடந்த 2018-19, 2020-21 ஆண்டுகளில் இந்தியா அங்கு தொடரை வென்றுள்ளது. அதற்கு முன் 11 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பிஜிடி தொடரை வென்றதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2-ஆவது இடத்திலும் உள்ளன. தொடா்ந்து 3-ஆவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேறும் நிலை இருந்தது. ஆனால், நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு அந்த வாய்ப்பு கடினமாகியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த பிஜிடி தொடரை 4-0 என்ற நிலையில் இந்தியா கைப்பற்றினால் மட்டுமே, இதர அணிகளின் தேவையின்றி இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடியும். அத்தகைய முடிவை இந்தத் தொடரில் எட்டுவது இமாலய சவாலாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.