![விரேந்தர் சேவாக், அவரது மகன் ஆர்யவிர் சேவாக்.](http://media.assettype.com/dinamani%2F2024-11-22%2Fj2353eim%2Fsehwag.jpg?rect=0%2C0%2C699%2C393&w=480&auto=format%2Ccompress&fit=max)
இந்திய கிரிக்கெட்டில் தொடக்க வீர்ராக களமிறங்கி அதிரடி பேட்டிங்கினால் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் வீரேந்திர சேவாக்.
இவரது மகன் ஆர்யவிர் சேவாக் கூச் பெஹர் டிராபி தொடரில் தில்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
19 வயதுக்கு குறைவானோர் விளையாடும் முதல்தர கிரிக்கெட் போட்டியில் தில்லி அணிக்காக 17 வயதாகும் ஆர்யவிர் சேவாக் 297 ரன்கள் (309 பந்துகள்) குவித்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க: ஆஸி. பந்துவீச்சில் அசத்தில்: இந்தியா 150 ரன்களுக்கு ஆல் அவுட்!
இதில் 51 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சேவாக்கின் அதிகபட்ச (319) ரன்னை முறியடிக்காமல் ஆட்டமிழந்தார். அது குறித்தும் ஜாலியாக கிண்டல் செய்துள்ளார் சேவாக்.
இந்த நிலையில் தந்தையும் முன்னாள் வீரருமான சேவாக் தனது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
சிறப்பாக விளையாடினாய் ஆர்யவிர் சேவாக். 23 ரன்கள் வித்தியாசத்தில் ஃபெராரியை இழந்துவிட்டாய். ஆனால், சிறப்பான ஆட்டம். இந்த நெருப்பை அணையாது வைத்திரு. அதிகமான பெரிய சதங்கள், இரட்டை, முச்சதங்களையும் அடிப்பாய் என்றார்.