பிரபல ஆப்கன் சுழற்பந்துவீச்சாளரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.
சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மெகா ஏலத்தின் முதல் நாளான இன்று பல்வேறு நட்சத்திர வீரர்களும் அதிக கோடிகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அகமது ஆகியோரை ஏலத்தில் எடுத்தது.
அவர்களைத் தொடர்ந்து, பிரபல ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரச்சின் ரவீந்திரா மற்றும் நூர் அகமது போன்ற சுழற்பந்துவீச்சு தெரிவுகள் உள்ளன.