திரும்பி வந்துட்டேனு சொல்லு... அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே!
படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)

திரும்பி வந்துட்டேனு சொல்லு... அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே!

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
Published on

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா (ரைட் டூ மேட்ச்), ராகுல் திரிபாதி ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உண்மையாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com