![ஸ்ரேயாஸ் ஐயர் (கோப்புப் படம்)](http://media.assettype.com/dinamani%2F2024-05%2F6c187529-2860-4cb8-9f91-bf2d6db312a3%2Fshreyas.jpg?rect=0%2C12%2C1181%2C664&w=480&auto=format%2Ccompress&fit=max)
இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.
இந்த ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக மாறி ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே இதுவரையிலான அதிகபட்ச தொகையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.