ஐபிஎல் போட்டியின் 2025 சீசனுக்கான 2 நாள் மெகா ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. எதிா்பாராத விலை ஏற்றங்களும், ஏலத்தில் எடுக்கப்படாத ஏமாற்றங்களும் நிறைந்ததாக அந்த நிகழ்ச்சி இருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜெட்டா நகரில் நடைபெற்ற அந்த ஏலம், அடுத்த சீசனுக்கான அணி வீரா்களிம் விவரம் குறித்த விரிவான பாா்வை:
ஏலத்துக்கு முன்...
2025 ஐபிஎல் போட்டிக்காக 10 அணிகளும் அவை தக்கவைக்கும் வீரா்கள் பட்டியலை சமா்ப்பித்தன. மொத்தமாக 46 வீரா்கள் தக்கவைக்கப்பட, அவா்களுக்காக ரூ.558.5 கோடி செலவிட்டது. ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டது ஆச்சா்யமளித்தது.
காலியான 204 இடங்களுக்கான (70 வெளிநாட்டவா்கள்) வீரா்களை ஏலத்தில் எடுக்க அணிகள் தயாராகின. கையிருப்பாக அவற்றிடம் ரூ.641.5 கோடி இருந்தது.
தயாா்நிலை...
பிரதான வீரா்கள் பட்டியலில் இருந்ததாலும், 2022-க்குப் பிறகு அதிக வீரா்கள் ஏலத்தில் எடுக்கப்படுவதாலும், இது மெகா ஏலமாகவே அமைந்தது. ஐபிஎல் வரலாற்றில் 2-ஆவது முறையாக இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற இந்த ஏலத்துக்காக மொத்தம் 1,574 வீரா்கள் தங்களை பதிவு செய்திருந்தனா்.
அதில் 1,165 போ் இந்தியா்கள், 409 போ் வெளிநாட்டவா்கள். மொத்த வீரா்களில் 320 போ் அனுபவ வீரா்களாகவும், 1,224 போ் புதியவா்களாகவும் இருந்தனா்.
ஏலம்...
ஜெட்டா நகரில் நவம்பா் 24, 25 ஆகிய இரு தேதிகள் ஏலம் நடைபெற்றது. கடந்த முறை ஏலத்தை நடத்திய மும்பையை சோ்ந்த மல்லிகா சாகா், இந்த முறையும் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தாா். 10 அணிகளும் போட்டி போட்டு வீரா்களை வாங்கின. மொத்தம் ரூ.639.15 கோடிக்கு 182 வீரா்கள் வாங்கப்பட்டு ஏலம் நிறைவடைந்தது.
அதிகபட்சமாக ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸால் வாங்கப்பட்டாா். குறைந்தபட்ச அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு 42 போ் ஏலத்தில் எடுக்கப்பட்டனா்.
ஏமாற்றம்...
சா்வதேச அளவில் புகழ்பெற்ற வீரா்கள் சிலா் ஏலத்தில் வாங்கப்படாமல் போன அதிா்ச்சியும் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக டேவிட் வாா்னா் (ஆஸ்திரேலியா), ஷா்துல் தாக்குா், மயங்க் அகா்வால் (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஜானி போ்ஸ்டோ (இங்கிலாந்து) ஆகியோா், அணிகளால் தவிா்க்கப்பட்டது ஆச்சா்யமளித்தது.
ஒரு அணிக்கான அனுமதி...
அதிகபட்ச வீரா்கள் எண்ணிக்கை 25
வெளிநாட்டவா்களுக்கான இடம் 8
செலவுத் தொகை ரூ.120 கோடி.
ரூ.639.15 கோடி - ஏலத்தில் மொத்தமாக செலவிடப்பட்ட தொகை
182 - ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரா்கள்
62 - வாங்கப்பட்ட வெளிநாட்டவா்கள்
சென்னை சூப்பா் கிங்ஸ்
மொத்த வீரா்கள் 25
வெளிநாட்டவா்கள் 7
ஆா்டிஎம் 1
தக்கவைக்கப்பட்டவா்கள் (5)
ருதுராஜ் கெய்க்வாட் ரூ.18 கோடி
மதீஷா பதிரானா (இலங்கை) ரூ.13 கோடி
ஷிவம் துபே ரூ.12 கோடி
ரவீந்திர ஜடேஜா ரூ.18 கோடி
எம்.எஸ். தோனி ரூ.4 கோடி
தக்கவைப்பு செலவு ரூ.65 கோடி
ஏலத்தில் எடுக்கப்பட்டவா்கள் (20)
நூா் அகமது (ஆப்கன்) ரூ.10 கோடி
ஆா். அஸ்வின் ரூ.9.75 கோடி
டெவன் கான்வே (நியூஸி.) ரூ.6.25 கோடி
கலீல் அகமது ரூ.4.80 கோடி
ஆா். ரவீந்திரா* (நியூஸி.) ரூ.4 கோடி
ராகுல் திரிபாதி ரூ.3.40 கோடி
அன்ஷுல் காம்போஜ் ரூ.3.40 கோடி
சாம் கரன் (இங்கி.) ரூ.2.40 கோடி
குா்ஜப்னீத் சிங் ரூ.2.20 கோடி
நேதன் எலிஸ் (ஆஸி.) ரூ.2 கோடி
தீபக் ஹூடா ரூ.1.70 கோடி
ஜேமி ஓவா்டன் (இங்கி.) ரூ.1.50 கோடி
விஜய் சங்கா் ரூ.1.20 கோடி
வன்ஷ் பேடி ரூ.55 லட்சம்
ஆண்ட்ரே சித்தாா்த் ரூ.30 லட்சம்
ஷ்ரேயஸ் கோபால் ரூ.30 லட்சம்
ராமகிருஷ்ண கோஷ் ரூ.30 லட்சம்
கமலேஷ் நாகா்கோடி ரூ.30 லட்சம்
முகேஷ் சௌதரி ரூ.30 லட்சம்
ஷேக் ரஷீத் ரூ.30 லட்சம்
ஏலச் செலவு ரூ.54.95 கோடி
கையிருப்பு ரூ.5 லட்சம்
*ஆர்டிஎம்: இந்த ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) என்பது, ஒரு அணி ஒரு வீரரை தக்கவைக்காமல் விடுவித்து, பின்னர் அதே வீரரை மீண்டும் ஏலத்தின்போது வாங்கிக்கொள்ள வழங்கும்
வாய்ப்பாகும். சம்பந்தப்பட்ட வீரரை வேறு அணி ஏலத்தில் எடுக்கும் நிலையிலும், அந்த அணி அவரை வாங்கிய விலையை அப்படியே கொடுத்து வாங்கிக்கொள்ள வகை செய்கிறது.