பானிபூரி - பெர்த் டெஸ்ட்: கடந்தகால வாழ்க்கையினால் பிறந்த நம்பிக்கை..! ஜெய்ஸ்வால் பேட்டி!

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் பேட்டியில் கூறியதாவது:
ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்படம்: ஏபி
Published on
Updated on
1 min read

இந்தியாவின் இளம் (22) அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 டெஸ்ட்டில் 1,568 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 58 உடன் சிறப்பாக விளையாடி வருகிறார்.

11 வயதில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு அஜாத் மைதீன் ரயிலில் பயணித்து ஆடுகளத்தின் தயாரிப்பாளர்களுடன் டென்ட்டில் வாழ்ந்து வந்தார். இரவில் பானிபூரி விற்று வாழ்க்கையை நடத்தி வந்தார்.

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் பேட்டியில் கூறியதாவது:

எந்தவிதமான சூழ்நிலையில் இருந்தாலும் திரும்பிவர என்னுடைய கடந்த வாழ்க்கை எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. நான் எப்போதும் போராட விரும்புகிறேன். போராட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறேன், போராட்ட களத்தில் இருக்கவே விரும்புகிறேன். போராட்டத்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்கவும் அதில் வெற்றி பெறவும் விரும்புகிறேன்.

என்னுடைய இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த வாழ்க்கைக்காக நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னைப் பற்றியும் என்மீதான நம்பிக்கையும் பல நேரங்களில் என்னுடைய உணர்ச்சிகள் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டுமெனவும் கற்றுக்கொள்ள என் வாழ்க்கை உதவியது.

நான் எனக்குப் பிடித்ததை செய்கிறேன். இந்தக் கணத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது. கடவுளுக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும். அனைத்து பந்துகளுடனும் இதை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

சதமடித்து கொண்டாடியது சற்று வித்தியாசமாக இருந்தது. நான் என் மனதில் இதைச் செய்வேன் அதைச் செய்வேன் எனப் பலதும் நினைப்பேன். திடீரென அதெல்லாம் நடந்தால் நான்தான் இதைச் செய்தேனா என ஆச்சரியப்படுவேன். அதனால் அப்படி கொண்டாடுவேன். அந்தக் கணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன்.

எனது ஆதரவாளர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் எனது முத்தங்கள். நான் எனது குடும்பத்துக்கு வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு பேசினேன். எனது சகோதரர் எப்போதும் கிரிக்கெட் குறித்து பேசுவார் என்றார்.

இரண்டாவது டெஸ்ட் வரும் டிச.6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com