ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம்போன வீரர்களில் முதல் 5 இடங்களில் இந்திய வீரர்கள் உள்ளனர்.
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று முன் தினம் (நவம்பர் 24) தொடங்கி, நேற்றுடன் (நவம்பர் 25) நிறைவடைந்தது. இரண்டு நாள்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் வீரர்கள் பலரும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் 182 வீரர்கள் அணிகளால் ரூ.639.15 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் அதிகபட்ச தொகைக்கு ஏலம்போன வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ரிஷப் பந்த் படைத்தார். அவர் ரூ.27 கோடிக்கு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதிக விலைக்கு ஏலம்போன முதல் ஐந்து பேருமே இந்திய வீரர்கள்தான்.
அதிக விலைக்கு ஏலம்போன டாப் 10 வீரர்கள்
1.ரிஷப் பந்த் - ரூ.27 கோடி (லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்)
2.ஸ்ரேயாஸ் ஐயர் - ரூ.26.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
3.வெங்கடேஷ் ஐயர் - ரூ.23.75 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
4.அர்ஷ்தீப் சிங் - ரூ.18 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
5.யுஸ்வேந்திர சஹால் - ரூ.18 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
6.ஜோஸ் பட்லர் - ரூ.15.75 கோடி (குஜராத் டைட்டன்ஸ்)
7.கே.எல்.ராகுல் - ரூ.14 கோடி (தில்லி கேபிடல்ஸ்)
8.டிரெண்ட் போல்ட் - ரூ.12.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
9.ஜோஃப்ரா ஆர்ச்சர் - ரூ.12.50 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)
10.ஜோஸ் ஹேசில்வுட் - ரூ.12.50 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)