திருப்தியான ஏலம்: 6ஆவது கோப்பையை வெல்வோம்..! ஆகாஷ் அம்பானி நம்பிக்கை!

ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்தது திருப்திகரமாக இருந்ததாக மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
கோப்பையுடன் போல்ட், பும்ரா. ஆகாஷ் அம்பானி.
கோப்பையுடன் போல்ட், பும்ரா. ஆகாஷ் அம்பானி. படங்கள்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்
Published on
Updated on
2 min read

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று முன் தினம் (நவம்பர் 24) தொடங்கி, நேற்றுடன் (நவம்பர் 25) நிறைவடைந்தது. இரண்டு நாள்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் வீரர்கள் பலரும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

மும்பை இந்தியன்ஸ்

டிரெண்ட் போல்ட் (ரூ. 12.50 கோடி), நமன் திர் (ரூ. 5.25 கோடி), ரியான் ரிக்கல்டன் (ரூ. 1 கோடி), தீபக் சாஹர் (ரூ. 9.25 கோடி), வில் ஜாக்ஸ் (ரூ. 9.25 கோடி), அல்லாஹ் கசான்ஃபர் (ரூ. 4.80 கோடி), மிட்செல் சான்ட்னர் (ரூ. 2 கோடி), ரீஸ் டாப்ளே (ரூ. 75 லட்சம்), அஷ்வனி குமார் (ரூ. 30 லட்சம்), ராஜ் அங்கத் பாவா (ரூ. 30 லட்சம்), ஸ்ரீஜித் கிருஷ்ணன் (ரூ. 30 லட்சம்), லிசாத் வில்லியம்ஸ் (ரூ. 75 லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர் (ரூ. 30 லட்சம்), பெவன் ஜேக்கப்ஸ் (ரூ. 30 லட்சம்), வி.எஸ். பென்மெட்சா (ரூ. 30 லட்சம்), ராபின் மின்ஸ் (ரூ. 65 லட்சம்), கரண் சர்மா (ரூ. 50 லட்சம்)

தக்கவைப்பட்ட வீரர்கள்

ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, திலக் வர்மா.

மும்பை அணியில் வெளிநாட்டு சுழல் பந்துவீச்சாளர்களான மிட்செல் சான்ட்னர், அல்லாஹ் கசான்ஃபர் உடன் உள்நாட்டு கரன் சரண்மா இருக்கிறார்.

திருப்தியான ஏலம்

இந்த நிலையில் ஆகாஷ் அம்பானி ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அணியின் தேர்வு முழுமையான திருப்தியளித்துள்ளது. கடந்தகால மும்பை வீரர்கள் பலரை நாங்கள் இழந்துவிட்டோம். புதிய அணிக்கு தேர்வாகியுள்ள அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். நீங்கள் எப்போதும் எங்களது குடும்பத்தின் உறுப்பினர்கள்தான்.

டாப் 7 இடங்களில் ஏற்கனவே 4 பேரை தக்கவைத்திருந்தோம். சில இடங்களுக்கு மட்டுமே சரியான் ஆள்களை தேர்வு செய்ய வேண்டும். இந்தமுறை பந்துவீச்சுக்காக மட்டுமே அதிக கவனம் செலுத்தினோம். 2 நாள் ஏலத்தின் முடிவில் அதை சரியாக சாதித்ததாக நம்புகிறோம்.

போல்ட், ரீஸ் டாப்லி இருவரும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்கள் என்பது முக்கியம். போல்ட் முன்பே எங்களது அணியில் விளையாடியிருக்கிறார். புதிய பந்தில் ஸ்விங் ஏற்படுத்தி விக்கெட் எடுப்பதில் திறமையானவர். கடந்த சில சீசன்களில் எங்கள் அணியில் இல்லாதது சற்று வருத்தமளித்தது.

இனிமேல் விமர்சனங்கள் இருக்காது

எப்போதும் ஏலத்துக்குப் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியில் நல்ல ஸ்பின்னர்கள் இல்லை என்ற விமர்சனத்தைப் பார்ப்பேன். எங்களுக்கும் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை பிடிக்கும். ஆனால், அவர்கள் அதிக விலைக்கு செல்வார்கள். குறிப்பிட்ட சில இடங்களில் சில அணிக்கு எதிராக மிட்செல் சான்ட்னர், அல்லாஹ் கசான்ஃபர் உடன் விளையாடுவோம்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 6ஆவது கோப்பை வேண்டும். எப்போதை விடவும் இப்போது மிகவும் தேவைப்படுகிறது. நாங்கள் 6ஆவது முறையாக கோப்பையை வெல்வது முதல்முறை கோப்பையை வெல்வதற்கு சமம். கோப்பையை வென்று நீண்ட நாள்கள் ஆகின்றன. அடுத்த சீசனில் கோப்பையை வெல்வோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com