
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்தில் இன்று (நவம்பர் 28) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
கேன் வில்லியம்சன் அரைசதம்
முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் 93 ரன்கள் எடுத்து 7 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் டாம் லாதம் அதிகபட்சமாக 47 ரன்களும், கிளன் பிளிப்ஸ் 41* ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடான் கார்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
கிளன் பிளிப்ஸ் 41 ரன்களுடனும், டிம் சௌதி 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.