7 மே.இ.தீவுகள் அணி வீரர்கள் சிஎஸ்கே முகாமில் பயிற்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் 7 மே.இ. தீவுகள் அணியின் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவிருப்பதாக சிடபிள்யூஐ அறிவித்துள்ளது.
7 மே.இ.தீவுகள் அணி வீரர்கள் சிஎஸ்கே முகாமில் பயிற்சி.
7 மே.இ.தீவுகள் அணி வீரர்கள் சிஎஸ்கே முகாமில் பயிற்சி.
Published on
Updated on
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் 7 மே.இ. தீவுகள் அணியின் வீரர்கள் வரும் டிச.1 முதல் 14ஆம் தேதி வரை பயிற்சி மேற்கொள்ளவிருப்பதாக சிடபிள்யூஐ (மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம்) அறிவித்துள்ளது.

சிடபிள்யூஐ தலைமைப் பயிற்சியாளர் ரமேஷ் சுபான்ஷிங்கே துணை பயிற்சியாளர் ரோஹன் நர்ஸ் உடன் 7 பேர் அடங்கிய வீரர்ங்கள் நவ.29ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள்.

இந்த 7 பேரில் 3 வீரர்கள் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக் மெக்கனிஜ், மேத்திவ் நந்து, கெவின் விக்கம், டெட்டி பிஷப், ஜுவெல் ஆண்ட்ரூவ், ஜோர்டன் ஜான்சன், அக்கீம் ஆகஸ்டி ஆகிய வீரர்கள் வரவிருக்கிறார்கள்.

மே.இ.தீ. அணியின் இயக்குநர் மைல்ஸ் பாஸ்கோம்ப், “சென்னை அகாதெமி 7 பேட்டர்களுக்கு சுழல்பந்தில் எப்படி விளையாடுவது என்பதற்கான திறமையையும் அனுபவத்தையும் மேம்படுத்த பயிற்சி அளிக்கிறது.

எங்களது பயிற்சியாளர்கள் உடன் இருந்து அவர்களின் கற்றலை சரியான காலங்களில் வலுவடையவும் வருங்காலங்களில் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

வீரர்கள் இரண்டுநாள் போட்டிகள், 3 வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளும் சிஎஸ்கே அகாதெமியில் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

சிஎஸ்கே அகாதெமியின் இயக்குநர் ஸ்ரீராம் கிருஷ்ணமூர்த்தி உள்பட பல அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களுடன் மே.இ.தீ. வீரர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள்.

இதற்கு முன்பாக நியூசிலாந்து அணி இதை சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்றது. குறிப்பாக ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அகாதெமியில் பயிற்சிபெற்று அசத்தலாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.