இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தென்ன்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் விலகியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்!
படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தென்ன்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் வியான் முல்டர் விலகியுள்ளார்.

இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது.

ஆல்ரவுண்டர் விலகல்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டரான வியான் முல்டருக்கு வலது கையின் நடுவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வியான் முல்டர் விலகியுள்ளது தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வியான் முல்டருக்குப் பதிலாக மேத்யூ பிரீட்ஸ்க் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2-வது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், மேத்யூ பிரீட்ஸ்க், ஜெரால்டு கோட்ஸீ, டோனி டி ஸார்ஸி, மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், அய்டன் மார்க்ரம், செனுரன் முத்துசாமி, டேன் பாட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டான், கைல் வெரைன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.