மும்பையைச் சேர்ந்த 26 வயதான சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
ரஞ்சி கோப்பையில் 2019-2020இல் 928 ரன்கள், 2021-2022இல் 982 ரன்கள் எடுத்து அசத்தினார்.
தற்போது இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக மும்பை அணி பேட்டி செய்து வருகிறது. மும்பை அணிக்கு ரஹானே கேப்டனாகவும் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு ருதுராஜ் கேப்டனாகவும் செயல்படுகிறார்கள்.
முதல் நாள் முடிவில் மும்பை 237/4 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது, 2ஆம் நாளில் 128 ஓவர் முடிவில் 486/8 ரன்கள் எடுத்துள்ளது. சர்ஃபராஸ் கான் 255 பந்துகளில் 200 ரன்களுடனும் ஷர்துல் தாக்குர் 9 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.
இத்துடன் சர்ஃபராஸ் கானின் முதல்தர கிரிக்கெட்டில் 16 சதங்களும் 14 அரைசதங்களும் அடங்கும்.
இரானி கோப்பையில் சதமடித்த முதல் மும்பையர் என்ற சாதனையை படைத்துள்ளார்.