டி20யின் சிறந்த ஃபினிஷர் தினேஷ் கார்த்திக்..! சங்ககாரா புகழாரம்!

இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார சங்ககாரா தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை பாராட்டி பேசியுள்ளார்.
தினேஷ் கார்த்திக், சங்ககாரா.
தினேஷ் கார்த்திக், சங்ககாரா. கோப்புப் படங்கள்.
Published on
Updated on
1 min read

39 வயதாகும் தினேஷ் கார்த்திக் கடந்த ஐபிஎல் போட்டியுடன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 தொடரில் தினேஷ் கார்த்திக் பார்ல் ராயல்ஸ் அணியில் விளையாட தேர்வாகியுள்ளார்.

இந்தத் தொடரில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஜன.9ஆம் தேதி முதல் பிப்.8ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. பார்ல் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டி ஜன.11இல் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியுடன் மோதுகிறது.

தினேஷ் கார்த்திக் புள்ளி விவரங்கள்

டி20 கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் 401 போட்டிகளில் விளையாடி 7,407 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 139.96 ஆகும். ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக 326 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 187.36 ஆகும். அந்த அணி பிளே ஆஃப் தேர்வாக முக்கிய காரணமாக இருந்தார்.

180 சர்வதேச போட்டிகளில் கீப்பராக இருந்து 172 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

எஸ்ஏ20 தொடரில் வீரர்களின் ஏலத்துக்குப் பிறகு சங்ககாரா பேசியதாவது:

முதலில் தேவையான முக்கியமான வீரர்களை எடுத்து விட்டோம். இன்னும் சில இடங்களுக்கு மட்டுமே வீரர்கள் தேவை. கிரீம் ஸ்மித் தலைவராக இருக்கும்போது ஏலம் சிறப்பாக இருக்கிறது. எனக்கு தெரிந்து அனைத்து அணிகளும் இந்த ஏலத்தின் விதிமுறைகள் தேர்வுகளில் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.

ஜோ ரூட் மிகவும் முக்கியமான அனுபவமிக்க வீரர். அவருடைய அனுபவம், அறிவு அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

சிறந்த ஃபினிஷர்

தினேஷ் கார்த்திக் டெத் ஓவரில் சிறப்பான தேர்வு. அவர் அதிரடியாக விளையாடக் கூடியவர், மிகவும் திறமைசாலி. உலகத்திலேயே சிறந்த டி20 ஃபினிஷர்களில் ஒருவர். ஜாஸ் பட்லருக்கு பதிலாக அவரது இடத்தை பிரித்து இருவருக்கு திட்டமிட்டுள்ளோம். கடைசியாக இருந்ததைவிட இந்தமுறை நல்ல சமநிலை இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com