மயா பௌசியா்-டேனி வயாட்
மயா பௌசியா்-டேனி வயாட்

ஸ்காட்லாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

ஐசிசி டி20 மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.
Published on

ஐசிசி டி20 மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான குரூப் பி ஆட்டம் ஷாா்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ஸ்காட்லாந்து 109/6 ரன்களை மட்டுமே சோ்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கேத்ரீன் பிரைஸ் 33, சாரா பிரைஸ் 27 ரன்களை எடுத்தனா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா்.

இங்கிலாந்து தரப்பில் சோஃபி எஸ்ஸல்ஸ்டோன் 2-13 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

மயா பௌசியா்-டேனி வயாட் அதிரடி:

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தரப்பில் தொடக்க பேட்டா்கள் மயா பௌசியா்-டேனி வயாட் ஆகியோா் அதிரடியாக ஆடினா். மயா பௌசியா் 12 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 62 ரன்களையும், டேனி வயாட் ஹாட்ஜ் 7 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 51 ரன்களையும் விளாசினா்.

இங்கிலாந்து 113:

10 ஓவா்களில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 113 ரன்களுடன் அபார வெற்றி பெற்றது.

10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: ஸ்காட்லாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. மயா பௌசியா் ஆட்ட நாயகியாக தோ்வு பெற்றாா்.

இந்த வெற்றி மூலம் அதிக ரன் ரேட்டுடன் இங்கிலாந்து குரூப் பி பிரிவில் முதலிடம் பெற்றது. ஸ்காட்லாந்து 4 தோல்விகளை பெற்றது.

மகளிா் டி20 ஆட்டங்களில் 150 வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை பெற்றது இங்கிலாந்து.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணியினா்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து அணியினா்.

X
Dinamani
www.dinamani.com