
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2017 முதல் 2022 வரை மும்பை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர் இலங்கையைச் சேர்ந்த ஜெயவர்தனே. இவர் பயிற்சியாளராக இருந்தபோது மும்பை அணிக்காக மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த பொறுப்புக்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மார்க் பவுச்சர் வந்தார்.
ஆனால் அவரது காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. மேலும் மும்பை அணி வீரர்களுக்கு இடையேயும் சுமூகமான உறவு இல்லை என்கிற புகாரும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.