ஆண் குழந்தைக்கு தந்தையானார் சர்ஃப்ராஸ் கான்!

இந்திய வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையுடன் சர்ஃப்ராஸ் கான்
குழந்தையுடன் சர்ஃப்ராஸ் கான்படம் |எக்ஸ்
Published on
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற மேற்கோளுடன் தனது தந்தை, குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சர்ஃப்ராஸ் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரோமனா ஜாஹூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சர்ஃப்ராஸ் கான் கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் அனில் கும்ப்ளேவிடம் இந்திய அணியின் தொப்பியை வாங்கும் போது அவரது மனைவியும், தந்தையும் கண்ணீர்விட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆஸி. முதல்தரப் போட்டி: ருதுராஜ் தலைமையிலான இந்தியா ஏ அணி அறிவிப்பு!

சர்ஃப்ராஸ் கானின்  இன்ஸ்டாகிராம் பதிவு
சர்ஃப்ராஸ் கானின் இன்ஸ்டாகிராம் பதிவு

முன்னதாக, பெங்களூருவில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃப்ராஸ் கான் 150 ரன்கள் அடித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார்.

இதுவரை இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் சர்ஃப்ராஸ் கான் 350 ரன்கள் குவித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மாற்றுவீரராக இருந்த சர்ஃப்ராஸ் கானுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வங்கதேச வீரர் சாதனை!

கடந்த மாதம் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி சர்ஃபராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார். அதன்பின்னர் அக்டோபர் 2 ஆம் தேதி நடந்த இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய சர்ஃப்ராஸ் கான் இரட்டைசதம் விளாசினார். மேலும், விபத்தில் சிக்கிய தனது தம்பிக்காக இரட்டை சதம் அடித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இன்று (அக்டோபர். 22) தனது 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சர்ஃப்ராஸ் கானுக்கு இணையதளத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

13 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் மட்டுமே; பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறுவாரா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com