சமூகவலைதள விமர்சனங்களால் கவலையில்லை..! கே.எல்.ராகுலை நம்பும் கம்பீர்!

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடுவார் என தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார்.
கே.எல்.ராகுல், கம்பீர்.
கே.எல்.ராகுல், கம்பீர்.
Published on
Updated on
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடுவார் என தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார்.

பெங்களூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் கே.எல்.ராகுல் முதல் இன்னிங்ஸில் டக் அவுட், 2ஆவது இன்னிங்ஸில் 12 ரன்கள் எடுத்தார்.

மிக மோசமான ஃபார்மில் கே.எல்.ராகுல் இருக்கிறார். சர்ஃபராஸ் கான் 150 அடித்து அசத்தினர். ஷுப்மன் கில் உடல்தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில் யார் அணியில் இடம்பெறுவார்கள் என்பது குறித்து தலைமைப் பயிற்சியாளர் கே.எல்.ராகுல் கூறியதாவது:

சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களுக்கு துளியும் மதிப்பில்லை. சமூக வலைதளத்துக்காக ஒரு வீரரை தேர்வு செய்ய முடியாது. திறன்வாய்ந்தவர்கள் சிலரும் விமர்சித்தாலும் கவலையில்லை.

அணியின் தலைமைக் குழுவும் கேப்டனும் என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியம். சர்வதேச கிரிக்கெட் என்பது மதிப்பீடு செய்வதுதான்.ஆனால், என்னைப் பொறுத்தவரை கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடுகிறார்.

கான்பூரில் வங்கதேசதுக்கு எதிராக கடினமான ஆடுகளத்தில் அணிக்கு தேவையான ரன்களை அடித்தார். நிச்சயமாக வருங்காலத்தில் ராகும் அதிகமான ரன்களை குவிப்பார் என நம்புகிறார். அதற்கான முழு தகுதியும் அவருக்கு இருக்கிறது. அதனால்தான் அவரை அணி முழுமையாக நம்புகிறது.

கில், ரிஷப் பந்த் விளையாடுவார்கள். மற்றவர்கள் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நாளை காலை இது குறித்து அறிவிக்கப்படும். அந்த ஆடுகளத்துக்கு ஏற்ற 11 பேரை தேர்வு செய்வோம்.

நியூசிலாந்தில் அதிகமான இடது கை பேட்டர்கள் இருப்பதால் வாஷிங்டன் உபயோகமாக இருப்பார். ஆனால், இன்னும் அணியில் யார் யார் என்று முடிவெடுக்கவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com