வங்கதேச ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

வங்கதேச ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி
ஆப்கானிஸ்தான் அணி
Published on
Updated on
1 min read

வங்கதேச ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

19 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான 23 வயதான செடிகுல்லா அடலுக்கு அணியில் முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எமெர்ஜிங் ஆசியா கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செடிகுல்லா அடல் இதுவரை 6 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடந்த மாதம் ஷார்ஜாவில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-1 தோற்றதற்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அணி தேர்வாளர் அஹ்மத் ஷா சுலிமான்கில் செடிகுல்லா அடல் வங்கதேசத்தின் எதிர்கால வீரர் என்றும் தெரிவித்துள்ளார்.

செடிகுல்லா அடல் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். கடைசி மூன்று இன்னிங்ஸில் 52, 95*,83 ரன்கள் எடுத்துள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர் நவீத் ஜத்ரன் கணுக்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்துள்ளார். அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் வலது கையில் காயம் தசைபிடிப்பு காரணமாக அணியில் தேர்வாகவில்லை.

வருகிறநவம்பர் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு இந்தத் தொடர், அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச்சில் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணி

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷீத் கான், நங்கியல் கரோட்டி, காஷான்ஃபார், நூர் அஹமத், பிலால் சமி, நவீத் ஜத்ரன், ஃபரித் அஹ்மத் மாலிக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com