கௌதம் கம்பீர் விரைவில் கற்றுக் கொள்வார்: ரவி சாஸ்திரி

இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பது ஒருபோதும் எளிதாக இருக்கப் போவதில்லை என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்தி தெரிவித்துள்ளார்.
கௌதம் கம்பீர் விரைவில் கற்றுக் கொள்வார்: ரவி சாஸ்திரி
படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பது ஒருபோதும் எளிதாக இருக்கப் போவதில்லை என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்தி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, சில தடுமாற்றங்களை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியை சந்தித்து. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியின் மூலம், இந்திய மண்ணில் டெஸ்ட் தொடர்களில் 12 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

ஒருபோதும் எளிதல்ல

தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பது ஒருபோதும் எளிதாக இருக்கப் போவதில்லை என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்தி தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி (கோப்புப் படம்)
ரவி சாஸ்திரி (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியை முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி வீழ்த்தியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து விமர்சனங்கள் எழுவதற்கு வித்திட்டுள்ளது.

கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டு சில மாதங்கள் மட்டுமே ஆகின்றன. மிகப் பெரிய அணியான இந்தியாவின் பயிற்சியாளராக செயல்படுவது ஒருபோதும் எளிதாக இருக்கப் போவதில்லை. தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் அவரது தொடக்க காலத்தில் உள்ளார். ஆனால், அவர் விரைவில் கற்றுக்கொள்வார் என்றார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.