
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் வங்கதேசம் முன்னேற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் வங்கதேசம் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கும் வங்கதேச வீரர்கள் - படம் | ஐசிசி
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் வங்கதேசம் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றுடன் (செப்டம்பர் 3) நிறைவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்கதேசம் முழுமையாக கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸுக்கு ஆட்டநாயகன் விருதும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மெஹிதி ஹாசன் மிராஸுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசை
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியதன் மூலம், வங்கதேசம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசையில் வங்கதேசம் 45.83 சதவிகித வெற்றிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 19.05 சதவிகித வெற்றிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி 68.52 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 62.50 சதவிகித வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலும் மற்றும் 50.00 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





