ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
தொடக்கத்தில் 2ஆவது ஓவரிலேயே விக்கெட் இழந்த ஸ்காட்லாந்து அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 56 ரன்கள் எடுத்தது.
20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி 9 விகெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஜியார்ஜ் முன்சே 28, மேத்திவ் கிராஸ் 27, ரிச்சி பெர்ரிங்டன் 23 ரன்களும் எடுத்தார்கள்.
ஆஸி.சார்பில் சீன் அப்பாட் 3 விக்கெட்டுகளும் ஆடம் ஜாம்பா, சேவியர் பேர்ட்லெட் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.