வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணி அதன் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
பயிற்சியை தொடங்கிய இந்திய அணி
முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், போட்டிக்கான பயிற்சியை இந்திய அணி தொடங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்பட வீரர்கள் பலரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விராட் கோலி (கோப்புப் படம்)
இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா நீண்ட நேரம் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சொந்த மண்ணில் முதல் முறையாக...
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, முதல் முறையாக இந்திய மண்ணில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதன் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் இந்திய அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மட்டுமின்றி, பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் மற்றும் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோரும் இந்த தொடர்களை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்விக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்போடு உள்ளனர்.
பாகிஸ்தானை வீழ்த்திய உற்சாகத்தில்...
அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது வங்கதேசம். பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்தோடு வங்கதேச அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்திய அணி 68.52 சதவிகித வெற்றிகளையும், ஆஸ்திரேலியா 62.50 சதவிகித வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம், வங்கதேசம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 45.83 சதவிகித வெற்றிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா துருவ் ஜுரெல்?

விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் புகழாரம்!

ரோஹித், கோலியால் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறதா? யுவராஜ் சிங் கூறுவதென்ன?
233 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா: விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா் அரை சதம்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



