லிவிங்ஸ்டன் அதிரடி: 2ஆவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
லிவிங்ஸ்டன்
லிவிங்ஸ்டன்
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 193/6 ரன்கள் எடுத்தது.

ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் - முதல் அரைசதம்

ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இங்கிலிஷ் 42, ஹெட் 31, ஷார்ட் 28, ஆரோன் ஹார்டி 20 ரன்களும் எடுத்தார்கள்.

இங்கிலாந்து சார்பில் லிவிஸ்டன், கார்சி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

ஆட்ட நாயகன் லிவிங்ஸ்டன்

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 19 ஓவர் முடிவில் 194/7 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லியாம் லிவிங்ஸ்டன் 87 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜேகப் பெதல் 44, பிலிப் சால்ட் 39 ரன்களும் எடுத்தார்கள்.

ஆஸ்திரேலியாவின் மேத்திவ் ஷார்ட் 5 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி பெறமுடியவில்லை.

லிவிஸ்டன் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் அசத்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தற்போது 1-1 என தொடர் சமநிலையில் இருக்கிறது. கடைசி டி20 போட்டி வரும் ஞாயிறு (செப்.15) இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com