ஜடேஜா மீது எப்போதும் பொறாமை கொள்கிறேன்: ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜடேஜா, அஸ்வின்
ஜடேஜா, அஸ்வின்படம் | AP
Published on
Updated on
1 min read

ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினர்.

அஸ்வின் மற்றும் ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி 199 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் முறையே 113 ரன்கள் மற்றும் 86 ரன்கள் எடுத்தனர்.

பொறாமைப் படுகிறேன்

ரவீந்திர ஜடேஜாவைப் பார்த்து எப்போதும் பொறாமைப்படுவதாக அவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வெகுவாக பாராட்டியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா குறித்து அஸ்வின் பேசியதாவது: ரவீந்திர ஜடேஜாவைப் பார்த்து எப்போதும் பொறாமைப் படுகிறேன். அவர் மிகவும் திறமையானவர். அவரது திறன்களை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். நான் அவராக இருக்க ஆசைப்படுவேன். ஆனால், நான் நானாக இருப்பதிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் நன்றாக செயல்படுவதைப் பார்த்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அவர் கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் செய்வதைப் பார்த்து, நாம் எவ்வாறு சிறப்பாக பேட் செய்யலாம் என யோசித்துள்ளேன்.

பந்துவீச்சை பொறுத்தவரையில், அவர் மிகவும் எளிமையாக செயல்படுவார். நாங்கள் இருவரும் பந்துவீச்சில் ஒன்றாக வளர்ந்து வந்தோம். இருவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எனது வெற்றியை அவரும், அவரது வெற்றியை நானும் கொண்டாடுகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.