
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 106 ரன்களுக்குள் சுருட்டி ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 311 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 105 ரன்கள் எடுத்தார். அஜ்மதுல்லா 86 ரன்களும் ரஹ்மத் 50 ரன்களும் எடுத்தார்கள்.
இதையும் படிக்க: தங்கத்தை நெருங்கும் ஆடவா் அணி: மகளிருக்கு முதல் தோல்வி
அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 34.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெம்பா பவுமா அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார்.
9 ஓவர்கள் வீசிய ரஷித் கான் 39 பந்துகளில் ரன்கள் ஏதும் கொடுக்காமல் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. தென்னாப்பிரிக்க அணி தனது மோசன்மான கிரிக்கெட்டினை விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.