கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர், அண்மையில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடர்லும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மிகவும் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
50 ஓவர் உலகக் கோப்பையின்போது பாபர் அசாமின் தலைமைப் பண்பு (கேப்டன்சி) கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.
அதன்பின், டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அதிலும் பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாத நிலையில், மீண்டுமொருமுறை பாபர் அசாமின் கேப்டன்சி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
தற்போது டெஸ்ட்டில் கேப்டனாக ஷான் மசூத், ஒருநாள், டி20யில் பாபர் அசாம் கேப்டன்களாக இருக்கிறார்கள்.
விரைவில் சாம்பியன்ஷ் டிராபி பாகிஸ்தானில் தொடங்கவிருக்கிறது.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் (டி20, ஒருநாள்) பாபர் அசாமுக்கு பதிலாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுவதாக சமீபத்தில் பேச்சு எழுந்தது. ஆனால், பாபர் அசாம் மீண்டும் சாம்பியன் டிராவி வரை கேப்டன் பொறுப்பில் தக்கவைக்கப்படுவார் எனக் கூறப்பட்டது.
இதையும் படிக்க: வினேஷ் போகத்துக்கு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை நோட்டீஸ்!
இந்த நிலையில், இது குறித்து பாக். அணியின் தொடக்க வீரர் அகமது ஷெஜாத் தனது யூடியூப் பக்கத்தில் கூறியதாவது:
சமீபத்தில் நடந்த கூட்டம் கேப்டன்சி (அணித் தலைவர்) குறித்தோ அல்லது தேசிய ஒப்பந்தம் குறித்தோ நடைபெறவில்லை. சாம்பியன்ஷ் டிராபி வரை பாபர் அசாம் கேப்டனாக செயல்படுவாரென மக்கள் சொல்கிறார்கள். ஆனால், இது தவறான தகவல். பாபர் அசாம் அவராகவே ராஜிநாமா செய்யாவிட்டால் கேப்டன் பொறுப்பில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் (பிசிபி) நீக்கப்படுவார். கேரி கிறிஸ்டியன் சாம்பியன் டிராபிக்கு முன்பு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார். புதிய வாய்ப்புகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்றார்.