
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 373 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 23 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, இன்று (ஆகஸ்ட் 2) மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்குப்பின், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய தரப்பில் அதிகபட்சமாக
யஜஸ்வி ஜெய்ஸ்வால் 118
ஆகாஷ் தீப் - 66
ரவீந்திர ஜடேஜா - 53
வாஷிங்டன் சுந்தர் - 53 ரன்கள் திரட்டினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் டங் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 374 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.
விக்கெட் வீழ்த்தினால் வெற்றி இந்தியா வசம்; இல்லையேல் இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றிவிடும். இப்படி பரபரப்பான கட்டத்தில் கடைசி டெஸ்ட் நகருகிறது!
இதையும் படிக்க: இந்தத் தொடரின் அதிவேக அரைசதம்: வாஷிங்டன் சுந்தர் அபாரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.