இங்கிலாந்து தொடருக்காக ஒவ்வொரு நிமிடமும் கடினமாக உழைத்த கே.எல்.ராகுல்: அபிஷேக் நாயர்
படம் | AP

இங்கிலாந்து தொடருக்காக ஒவ்வொரு நிமிடமும் கடினமாக உழைத்த கே.எல்.ராகுல்: அபிஷேக் நாயர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியின் கே.எல்.ராகுல் ஐபிஎல் நிறைவடைந்த பிறகு கடிமனாக உழைத்ததாக அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.
Published on

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியின் கே.எல்.ராகுல் ஐபிஎல் நிறைவடைந்த பிறகு கடிமனாக உழைத்ததாக இந்திய அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

அபிஷேக் நாயர் கூறியதென்ன?

ஐபிஎல் தொடரில் தனது கடைசிப் போட்டியில் விளையாடிய பிறகு, ஒவ்வொரு நிமிடத்தையும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக கே.எல்.ராகுல் செலவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கே.எல்.ராகுல் விளையாடும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து என்னால் பேச முடியாது. அவரது ஆட்டத்தில் செய்துள்ள மாற்றங்கள் குறித்துப் பேசினால் அதன் திறன் குறைந்துவிடும். அவரது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் நன்றாக வேலை செய்துள்ளது என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும்.

கே.எல்.ராகுல் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். கே.எல்.ராகுலுக்கு குழந்தை பிறந்த பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடினார். அதன் பின், உடனடியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக தயாராகத் தொடங்கினார் என்பது பலருக்கும் தெரியாது. இந்த மாதிரியான சூழலில் பலரும் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முக்கியத்துவத்தை அறிந்திருந்ததால், அவர் கடுமையாக உழைத்தார்.

ஐபிஎல் தொடரில் அவரது கடைசி போட்டிக்குப் பிறகு, அவர் உடனடியாக இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடினார். அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்கி சிறப்பாக விளையாட அவர் தயாராக இருக்கிறார் என்றார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 532 ரன்களுடன் கே.எல்.ராகுல் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதில் இரண்டு சதங்கள், இரண்டு அரைசதங்கள் அடங்கும். 754 ரன்களுடன் ஷுப்மன் கில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Abhishek Nair has said that Indian team's KL Rahul worked hard after the conclusion of the IPL for the Test series against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com