
கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
பாராட்டு மழையில் இந்திய அணி
ஓவல் டெஸ்ட்டில் த்ரில் பெற்ற இந்திய அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர்
டெஸ்ட் கிரிக்கெட்... இந்திய அணியின் செயல்பாடு புல்லரிக்க வைக்கிறது. தொடரை இந்திய அணி 2-2 என சமன் செய்துள்ளது. இந்திய அணியின் செயல்பாடுகளுக்கு 10/10 மதிப்பெண் கொடுப்பேன். இந்திய அணியின் சூப்பர் ஹீரோக்கள் கலக்கிவிட்டனர். என்ன ஒரு அருமையான வெற்றி.
சௌரவ் கங்குலி
இந்திய அணி மிகவும் அற்புதமாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. டெஸ்ட் வடிவிலான போட்டிகள் மிகவும் சிறப்பானவை என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கும், பயிற்சியாளர்கள் குழுவுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் எந்த மூலையில் விளையாடினாலும், சிராஜ் இந்திய அணியை அவ்வளவு எளிதாக தோற்கவிடமாட்டார். ஓவல் டெஸ்ட்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டனர்.
புஜாரா
வரலாற்று வெற்றி. இந்திய அணியின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. சுவாரசியமாக சென்ற இந்த தொடருக்கான சிறப்பான முடிவு கிடைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டினைப் போன்று சிறந்தது வேறு ஒன்றுமில்லை.
அனில் கும்ப்ளே
இந்திய அணி மிகவும் நன்றாக விளையாடியது. என்ன ஒரு அருமையான டெஸ்ட் தொடர். அற்புதமாக விளையாடிய இரண்டு அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் அபாரமாக செயல்பட்டனர். ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.
ஹர்பஜன் சிங்
முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் அபாரமாக பந்துவீசினார்கள். இந்திய அணிக்கு என்ன ஒரு சிறப்பான வெற்றி. அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
அஜிங்க்யா ரஹானே
டெஸ்ட் கிரிக்கெட் இதைவிட சிறப்பானதாக இருக்க முடியாது. மிகவும் பரபரப்பான போட்டி. அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.
இதையும் படிக்க: ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன்செய்த முகமது சிராஜ்!
Many former players have congratulated the Indian team for their thrilling victory over England in the final Test.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.