ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!
இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட்டில் வெற்றிபெற காரணமாக இருந்த முகமது சிராஜ் தனது வெற்றிக்கான ரகசியத்துக்கு காரணம் கிறிஸ்டியானோ ரொனால்டோ எனக் கூறியுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி டெஸ்ட்டை 6 ரன்களில் வென்று தொடரை 2-2 என சமன்செய்தது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இவ்வளவு சிறப்பாக விளையாடியது எப்படி என செய்தியாளர் சந்திப்பில் சிராஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
நம்பிக்கைதான் எல்லாமே...
தொழில்முறை வீரராக இருக்கும் எல்லோருக்கும் நம்பிக்கை என்பது முக்கியம். நம்பிக்கையின்றி எதுவுமே சாத்தியமில்லை.
பொதுவாக, நான் காலை 8 மணிக்கு எழுந்திருப்பேன். ஆனால், இன்று (போட்டியின் கடைசி நாள்) காலை 6 மணிக்கே எழுந்துவிட்டேன்.
கூகுளில் நம்பிக்கை என்ற இந்தப் புகைப்படத்தை தேடி எனது மொபைலில் வால்பேப்பராக வைத்தேன். இன்று எனது நாட்டிற்காக என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என நினைத்தேன்.
எந்த நேரத்திலும் என்னால் போட்டியை மாற்றமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
சிராஜ் தீவிரமான ரொனால்டோ ரசிகர். விக்கெட் எடுத்தபிறகு ரொனால்டோ பாணியில் (சுயூ..) கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ரொனால்டோ?
போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ (40 வயது) கால்பந்து உலகில் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.
உலக அளவில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் இருக்கிறார்.
திறமையைவிட தனது கடினமான உழைப்பினால் முன்னேறி பலருக்கும் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார். மேஜிக் மேன் என்றழைக்கப்படும் மெஸ்ஸியுடன் ஒப்பிடப்படுகிறார்.
ரொனால்டோ தற்போது அல்-நாஸர் அணியுடன் மீண்டும் ஒப்பந்தத்தை புத்துப்பித்து கூடுதலாக 2 ஆண்டுகள் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mohammed Siraj, who was instrumental in India's victory in the 5th Test against England, has credited Cristiano Ronaldo as the secret to his success.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.