
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தன்னுடைய வாழ்நாளின் சிறந்த தரநிலையை இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் கோப்பைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சிறந்த டெஸ்ட் தொடராகக் கருதப்படும் இந்தத் தொடரில் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், வாரந்தோறும் புதன்கிழமை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வெளியிடப்படும் ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளார். தொடரின் துவக்கத்தில் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் ஓவலில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி 118 ரன்கள் விளாசி அசத்தினார். மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2 சதம், 2 அரைசதம் உள்பட 411 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன்மூலம், 792 புள்ளிகள் பெற்று 3 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரநிலையான 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஓவல் டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸ்கள் முறையே 21 மற்றும் 11 ரன்கள் எடுத்த இந்திய அணி கேப்டன் கில், 4 இடங்கள் குறைந்து 13 இடத்துக்கு சரிந்துள்ளார். மேலும், அவர் 754 புள்ளிகள் எடுத்துள்ளார்.
காயம் காரணமாக கடைசிப் போட்டியில் இருந்து விலகிய இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஒரு இடம் சரிந்து 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தில் தொடர்கிறார். மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் பத்து இடங்களில்...
ஜோ ரூட் - 908 புள்ளிகள்
ஹாரி புரூக் - 868 புள்ளிகள்
கேன் வில்லியம்சன் - 858 புள்ளிகள்
ஸ்டீவ் ஸ்மித் - 816 புள்ளிகள்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 792 புள்ளிகள்
டெம்பா பவுமா - 790 புள்ளிகள்
கமிந்து மெண்டிஸ் - 781 புள்ளிகள்
ரிஷப் பந்த் - 768 புள்ளிகள்
டேரில் மிட்செல் - 748 புள்ளிகள்
பென் டக்கெட் - 747 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.