சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!

இந்தியாவுக்கு எதிரான ஆஸி. ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சாம் கான்ஸ்டாஸ். - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா

Updated On :7 ஆகஸ்ட் 2025, 2:08 pm IST

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து விளையாடவிருக்கும் ஆஸ்திரேலியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சாம் சான்ஸ்டாஸ், மெக்ஸ்வீனி ஆஸி. ஏ அணியில் இடம் பிடித்துள்ளார்கள்.

ஆஸ்திரேலியா ஏ அணி 2 நான்குநாள் டெஸ்ட் போட்டியும் 3 ஒருநாள் போட்டியும் விளையாடவிருக்கிறது.

டெஸ்ட் போட்டிகள் லக்னௌவில் வரும் செப். 16-19, செப். 23-26 ஆம் தேதிகளிலும் ஒருநாள் போட்டிகள் முறையே செப்.30, அக்.3, அக்.5ஆம் தேதிகளிலும் நடைபெற இருக்கின்றன.

புதிய சவாலுக்குத் தயாராகும் இளம் ஆஸி. வீரர்கள்

பார்டர் - கவாஸ்கர் தொடர் 2026- 27க்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் நோக்கில் மோதவிருப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

சாம் கான்ஸ்டாஸ் (19 வயது) மெக்ஸ்வீனி (26 வயது) டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகி சரியாக விளையாடவில்லை.

இது குறித்து ஜார்ஜ் பெய்லி, “துணைக் கண்டத்தில் விளையாடுவது எங்களது வீரர்களுக்கு தனித்துவமான சவாலாகவும் பந்து, பேட்டிங்கில் புதிய திறமைகளை பயன்படுத்தவும் வாய்ப்பாக அமையும்” எனக் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கான அணி: சேவியர் பார்ட்லெட், கூப்பர் கன்னோலி, ஜாக் எட்வர்ட்ஸ், ஆரோன் ஹார்டி, கேம்பல் கெல்லவே, சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, ஃபெர்கஸ் ஓ'நீல், ஆலிவர் பீக், ஜோஷ் பிலிப், கோரி ரோச்சிசியோலி, லியாம் ஸ்காட்.

ஒருநாள் போட்டிக்கான அணி: கூப்பர் கோனொலி, ஹாரி டிக்சன், ஜாக் எட்வர்ட்ஸ், சாம் எலியட், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, மெக்கன்சி ஹார்வி, டாட் மர்பி, தன்வீர் சங்கா, லியாம் ஸ்காட், லாச்சி ஷா, டாம் ஸ்ட்ரேக்கர், வில் சதர்லேண்ட், கால்லம் விட்லர்.

சமீபத்தில் ஆஸி. ஏ அணியில் 202 ரன்கள் குவித்த ஜேசன் சங்கா ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.