
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் களமிறங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் மிட்செல் மார்ஷ் நம்.3இல் களமிறங்கி, ஆஸி. முதல்முறையாக டி20யில் கோப்பை வெல்ல அவர் உதவினார்.
33 வயதாகும் மிட்செல் மார்ஷ் தற்போது ஆஸி. டி20 அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார்.
சமீபத்திய மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலும் தொடக்க வீரராக களமிறங்கினார். 5-0 என தொடரை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
தொடக்க வீரர்களாக ஹெட், மார்ஷ்
அடுத்ததாக, ஆஸி. அணி தென்னாப்பிரிக்காவுடன் டி20 தொடர் விளையாடவிருக்கும் நிலையில், மிட்செல் மார்ஷ் கூறியதாவது:
நானும் டிராவிஸ் ஹெட்டும் வருங்காலங்களில் தொடக்க வீரராக விளையாடுவோம் என எதிர்பார்க்கிறோம்.
அதிகமாக நாங்கள் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். அதனால், எங்களுக்கு நல்ல பழக்கம் இருக்கிறது.
உலகக் கோப்பை வரவிருப்பதால் அனைத்து வீரர்களையும் எந்த இடத்தில் வேண்டுமானால் விளையாட தளர்வாக இருக்கும்படி அறிவிப்பு வந்துள்ளது.
பந்துவீசமாட்டேன், ஆனால்...
தற்போதைக்கு நான் பந்துவீசப் போவதில்லை. ஆனால், அது நிரந்தரம் இல்லை. தற்போது ஒவ்வொரு தொடராக முன்னேறுவோம். எங்களுக்கு அதிகமான ஆப்ஷன்கள் இருக்கின்றன.
இன்னும் உலகக் கோப்பைக்கு முன்பாக15 போட்டிகள் உள்ளன. எங்களுக்கு தேவையான பாணியை இதில் உருவாக்குவோம். இதில், ஒவ்வொரு நொடியும் நிச்சயமாக மகிழ்ச்சியுடன் விளையாடுவோம் எனக் கூறினார்.
மிட்செல் மார்ஷ் 206 டி20 போட்டிகளில் 5,133 ரன்கள் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.