
சஞ்சு சாம்சன் டி20யில் கம்பேக் தருவதற்கு முக்கியமான காரணமாக கௌதம் கம்பீர்தான் எனக் கூறியுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இந்திய அணியில் பல ஆண்டுகளுக்கு முன்பாக தேர்வாகியும் சொற்ப போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
கௌதம் கம்பீர் வந்தபிறகு இவருக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
2024இல் தொடர்ச்சியக 7 போட்டிகளில் தொடக்க வீரராக தன்னை களமிறக்க சூர்யகுமார் யாதவ் முடிவெடுத்திருந்தார்.
அதன்படி இலங்கையில் 2 போட்டிகள் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆவார். இதனால், டிரெஸ்ஸிங் ரூமில் (ஓய்வறை) சஞ்சு சாம்சன் சோகமாக உட்கார்ந்திருக்கிறார். இதைப் பார்த்த கம்பீர், “என்னாச்சு?” எனக் கேட்டிருக்கிறார்.
அதற்கு சாம்சன், “எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை” எனக் கூறியுள்ளார். பிறகு கௌதம் கம்பீர், “அதனால் என்ன? நீ 21 டக்கவுட் ஆனால்தான் நான் உன்னை அணியில் இருந்து விடுவேன்” எனக் கூறியுள்ளார்.
இந்த அளவுக்கான நம்பிக்கையை கேப்டனும் பயிற்சியாளரும் அளிக்கும்போது தானாகவே நன்றாக விளையாடுவோம் என சாம்சன் அஸ்வினின் நேர்காணலில் கூறியிருந்தார்.
அந்த 2 டக் அவுட்டுக்குப் பிறகு, சாம்சன் 2 சதங்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. 304 டி20 போட்டிகளில் சாம்சன் 7,629 ரன்கள் குவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.