
முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில், முதல் டி20யில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் சொற்ப ரன்களில் ஆடமிழந்தார்கள்.
அடுத்து வந்த இங்லீஷ் டக் அவுட்டானார். கேமரூன் கிரீன் அடிரடியாக விளையாடி 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து பொறுப்பாக விளையாடிய டிம் டேவிட் அணியை சரிவிலிருந்து மீட்டு 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆஸி. அணி 178 ரன்கள் எடுத்தது. இறுதியில் நாதன் எல்லிஸ் 12 ரன்கள் எடுத்தார்.
தெ.ஆ.அணி சார்பில் மபாகா 4, ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த மற்ற வீரர்களில் முத்துசாமி, லின்டே, நெகிடி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஆஸி.யை முதல்முறையாக டி20யில் தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டாக்கி சாதனை படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.