
சர்வதேச மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (ஆகஸ்ட் 12) வெளியிட்டுள்ளது.
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 போட்டிகளுக்கான இந்த தரவரிசையில் இந்திய அணியில் தீப்தி சர்மா பந்துவீச்சாளர்களில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் சறுக்கி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார். அவர் 736 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் வீராங்கனை ஹேலி மேத்யூஸ் ( 505 ரேட்டிங் புள்ளிகள்), நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் (434 ரேட்டிங் புள்ளிகள்) முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள நிலையில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 387 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
பேட்டிங்கை பொருத்தவரை, ஸ்மிருதி மந்தனா (728 ரேட்டிங் புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி இரண்டாவது இடத்தில் உள்ளார். 728 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து வீராங்கனை நாட் ஷிவர் பிரண்ட் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 10 இடங்கள் முன்னேறி தற்போது தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ளார்.
இதையும் படிக்க: ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஷுப்மன் கில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.