

சதமடித்த டெவால்டு பிரெவிஸ் பற்றி ஏபிடி பொன்னான வாய்ப்பை ஐபிஎல் அணிகள் தவறவிட்டது எனக் கூறியுள்ளார்.
தெனாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான வீரர் டெவால்டு பிரெவிஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
தென்னாப்பிரிக்க அணிகளில் அதிகபட்ச ரன்கள் குவித்தவர் (125*) என்ற சாதனையையும் பிரெவிஸ் நிகழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் அணிகளில் யாருமே இவரை எடுக்காத நிலையில் மிட் சீசனில் சிஎஸ்கே அணி எடுத்தது.
சிஎஸ்கே அணியிலிருந்து தீயாக விளையாடிவரும் இவரைப் பலடும் ’பேபி ஏபிடி’ என அழைக்கிறார்கள்.
இந்நிலையில் சதமடித்து, ஆட்ட நாயகன் விருது வாங்கிய பிரெவிஸ் குறித்து ஏபிடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
ஏலத்தில் டெவால்டு பிரெவிஸை எடுக்க ஐபிஎல் அணிகளுக்கு பொன்னான வாய்ப்பு இருந்தது! அதைத் தவறவிட்டார்கள். சிஎஸ்கே எடுத்தது அதிர்ஷடமாக இருக்கலாம் அல்லது மிகப்பெரிய வல்லமைமிக்கச் செயல். அந்தப் பையனால் விளையாட முடியும் எனக் கூறியுள்ளார்.
பிரெவிஸ் 56 பந்துகளில் 125* ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். மேலும், ஃபீல்டிங்கில் இரண்டு சிறப்பான கேட்ச்களை பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.