
இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்டு பிரெவிஸ் தான் அசலான பிரெவிஸாக இருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
சமூக வலைதளத்தில் ரசிகர்கள் இவரை ’பேபி ஏபிடி’ என அழைகிறார்கள்.
முன்னாள் தெ.ஆ. வீரர் ஏபிடியைப் போலவே இவரும் விளையாடுவதால் இந்தப் புனைப்பெயர் வந்தது.
ஆஸி.க்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிவேகமாக சதமடித்து அசத்தினார்.
மொத்தமாக 56 பந்துகளில் 125* ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்நிலையில், போட்டிக்குப் பிறகு அவர் பேசியதாவது:
டிச.28, 2024 முதல் நான் ஒரு சபதமிட்டேன். எனக்குச் சில நபர்களைத் தெரியும். அவர்கள் என்னை மிகவும் நம்புகிறார்கள்.
முக்கியமான விஷயம் என்னனெறால் ஒரிஜினல் (அசலான) டெவால்டாக இருக்க வேண்டும். என்ன ஆனாலும் எல்லா பந்துகளையும் பார்த்து அடிக்க வேண்டும்.
இது மிகவும் சிறப்பான இடம். புரோட்டியாஸ் எனக்கானது. இதில் ஒரு அங்கமாக இருப்பது அவ்வளவு எளிதானதல்ல.
எனது மூத்த வீரர்கள் பலரும் இதைச் செய்யாதீர், இதைப் பார்த்து செய்யுங்கள் என எச்சரித்தார்கள். ஆனால், நான் அதற்கு மாறாகவே செய்து வருகிறேன். இதையெல்லாம் தாண்டி இங்கிருப்பது சிறப்பானது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.