
இந்திய அணி வீரர் விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டம் அவரது பேர் ஆர்வத்தினால் வருகிறது என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி களத்தில் எப்போதும் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்.
இது பலமுறை விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தாலும் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் அதனை நேர்மறையாகப் பாராட்டி பேசியுள்ளார்.
உலகக் கோப்பை 2011-இன் வெற்றி பெற்ற அணியில் கோலியுடன் ஸ்ரீசாந்த விளையாடியுள்ளார்.
ஆக்ரோஷமல்ல, வேட்கை...
இந்நிலையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் கோலி குறித்து ஸ்ரீசாந்த் கூறியதாவது:
விராட் கோலி எதையும் மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. மற்றவர்கள் இதனை ஆக்ரோஷம் எனலாம். ஆனால், நான் இதனை வேட்கை என்பேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது.
விராட்டின் ஆக்ரோஷமான கொண்டாட்டம் குறித்து பலரும் பல விதமாகப் பேசுகிறார்கள்.
விராட் கோலி அந்த ஆக்ரோஷத்தை கைவிட்டால் அவரால் அதே அளவுக்கு சிறப்பான வீரராக இருக்க முடியாது எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.