
செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இடம்பிடிக்கவில்லை.
ஆசிய கோப்பையில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள 17 பேர் கொண்ட அணி இன்று(ஆக. 17) அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமுக்கு அந்த அணியில் இடமில்லாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2021-இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியனாக மேற்கண்ட இருவரும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இவர்கள் இருவரும் இல்லாதது அணிக்கு பின்னடைவாக அமையாது என்றே அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹேசன் தெரிவிக்கிறார்.
பாகிஸ்தான் அணி விவரம்:
சல்மான் அலி ஆகா (கேப்டன்),
அப்ரார் அகமது,
ஃபஹீம் அஷ்ரஃப்,
ஃபக்கர் ஜமான்,
ஹரிஸ் ரவூப்,
ஹசன் அலி,
ஹசன் நவாஸ்,
ஹுசைன் தலாத்,
குஷ்தில் ஷா,
முகமது ஹாரிஸ் (விக்கெட்கீப்பர்),
முகமது நவாஸ்,
முகமது வசீம் ஜூனியர்,
சையூம் அயூப்
சல்மான் மிர்ஸா
சாஹீன் ஷா அப்ரிடி,
சுஃப்யான் மொகிம்.
சஹீப்சாதா ஃபர்ஹான்
ஆசிய கண்டத்திலிருந்து 8 முக்கிய அணிகள் பங்கேற்கும் இந்தப் பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழாவில் முதல் டி20 ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 நடைபெறுகிறது. இறுதிப்போட்டி நடைபெறும் செப். 28-இல் ஆசிய கோப்பை சாம்பியன் யார்? என்பது தெரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.